ஓசூரில் கர்த்தர் வெற்றி சிறந்தார்
தமிழக கர்நாடக எல்லையில் அமைந்திருக்கும் ஓசூர் பட்டணத்தில் மாபெரும் விடுதலை பெருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது .
அங்குள்ள கேம்ப்ரிட்ஜ் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஆண்டவர் இயேசுவால் தொடப்பட்டு விடுதலை பெற்று சென்றனர் . இக்கூட்டத்தை தடை செய்ய சாத்தான் பல விதங்களில் முயற்சி செய்த போதிலும் அவனுடைய எல்லா முயற்சிகளையும் தோற்கடித்து கர்த்தர் மகிமையாய் வெற்றி சிறந்தார் .
மத தீவிரவாதிகளின் எல்லா எதிர்ப்புகளையும் உடைத்தெறிந்த ஆண்டவர் இயேசுகிறிஸ்து ஆணித்தரமான தம் வார்த்தைகளினால் சகோ.மோகன் சி.லாசரஸ் , சகோ. அப்பாதுரை ஆகியோரை வல்லமையாக பயன்படுத்தினார்.கர்த்தரின் வார்த்தைகளையும், அற்புதமான செயல்களையும் எந்த அந்தகார வல்லமைகளும் தடை செய்ய முடியவில்லை. ஜெபவேளைகளில் ஜனங்கள் கண்ணீரோடு மனந்திரும்பி தங்கள் வாழ்க்கையை ஆண்டவர் இயேசுவுக்கென்று பரிசுத்தமாய் வாழ ஒப்புக்கொடுத்தனர்.தேவன் தம் அன்புக்கரங்களினால் ஜனங்களை தொட்டு விடுதலை செய்தார். விடுதலையும் சுகமும் பெற்ற மக்கள் தாங்கள் பெற்ற அற்புதமான அனுபவங்களை உணர்வு பொங்க சாட்சியாக எடுத்துரைத்தனர்.
பெண்களுக்காக நடைபெற்ற சிறப்புகூட்டத்தில் சகோதரி ஜாய்ஸ் லாசரஸ் அவர்கள் ஜெபத்தை கேட்கும் ஆண்டவர் இயேசுவின் வல்லமையான வார்த்தைகளை எடுத்துரைத்து பிரார்த்தனைகள் ஏறெடுத்த வேளையில் கூடி வந்த பெண்கள் விடுதலையும் ஆனந்தமும் அடைந்தனர். சனிக்கிழமையில் நடைபெற்ற திறப்பின் வாசல் உபவாச ஜெபத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி வந்தனர். தேசத்தின் ஆசிர்வாதங்களுக்காக ஜெபங்கள் ஏறெடுத்த பின்னர் சகோ.மோகன் சி. லாசரஸ் அவர்கள் சிறப்பு செய்தி அளித்து அனைவருக்காகவும் பிரார்த்தனைகள் ஏறெடுத்தார்கள் . ஞாயிற்றுகிழமை நடைபெற்ற வாலிபர் சிறப்பு கூட்டத்தில் ஏராளமான வாலிபர்கள் கலந்துகொண்டனர். சகோ. சாம் ஜெபராஜ் அவர்கள் பரிசுத்த ஆவியனவரைபற்றி செய்தி யளித்து ஜெபித்தபோது தேவ ஆவியானவர் அனைத்து வாலிபர்களையும் தம் ஆவியினால் நிறைத்தார்.
இக்கூட்டத்தில் சகோ. ஜான் பன்னீர்செல்வம் அவர்கள் இயேசு விடுவிக்கிறார் குழுவினரின் இன்னிசையுடன் பாடல்கள் பாடி தேவ ஜனங்களை தேவ ஆவியனவருக்குள் வழி நடத்தினார்கள். தேவ ஊழியர்கள் பாஸ்டர் ஜோசப் உள்ளிட்ட போதகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். மேலும் சிறப்பு விருந்தினர்களாக ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீகோபிநாத் மற்றும் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திரு சுகவனம் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் ஆரம்பம் போராட்டம் நிறைந்ததாய் இருந்தாலும் முடிவு வெற்றியாய் அமைந்தது. மெய்யாகவே வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய கர்த்தர் ஓசூரிலே மகிமையாய் வெற்றி சிறந்தார்.

Really God is very powerfull.. he pour out his spirit vt all the chosen people..