Reports Nanjankulam Meetings
Nanjankulam Meetings

திருநெல்வேலி மாவட்டம்

நாஞ்சான்குளத்தில்

தேவன் தம் ஜனங்களை சந்தித்தார்

நாஞ்சான்குளம்- திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஓர் சிறிய கிராமம். சுமார் 15  கிறிஸ்தவ குடும்பங்களே உள்ள இந்த கிராமத்தில் அங்குள்ள சி.எஸ்.ஐ  திருச்சபை சார்பாக விடுதலை பெருவிழா  நடத்தப்பட்டது . சகோ. ஜெயக்குமார், சகோ அப்பாத்துரை, சகோ மோகன் சி லாசரஸ் ஆகியோர் கர்த்தருடைய வார்த்தைகளை அறிவித்து கூடி வந்த மக்களுக்காக  பிரார்த்தனைகள் ஏறெடுத்தார்கள். பஸ் வசதிகள் குறைவான, சிறிய கிராமமாயிருந்தாலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி வந்தது  அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சனிக்கிழமை நடைபெற்ற உபவாச ஜெபத்திலும் ஏராளமான ஜனங்கள் கூடி வந்து தேசத்தின் ஆசீர்வாதங்களுக்காக கண்ணீருடன் பிரார்த்தனைகள் ஏறெடுத்தார்கள்  .

ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற குடும்ப ஆசீர்வாத ஆராதனையில்  ஏராளமான  மக்கள் குடும்பமாக கலந்து கொண்டு ஆசீர்வதிக்கபட்டனர். விடுதலை பெற்ற மக்கள் சாட்சி   கூறி தேவனை மகிமைப்படுத்தினர்.  இக்கூட்டங்களில் திருநெல்வேலி திருமண்டல பேராயர் மாமறை திரு ஜே .ஜே கிறிஸ்துதாஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.   அருள்திரு  முத்துராஜ் அவர்கள் மிகுந்த ஜெபத்துடனும், பிரயாசத்துடனும் இக்கூட்டங்களை நடத்தினார்கள். கிராம மக்களுக்கு மத்தியில் தேவாதி தேவன் பிரத்தியட்சமாக கடந்து வந்து தம் ஜனங்களை சந்தித்து மகிமைப்பட்டார்.