Reports Salem Meetings
Salem Meetings

சேலம் மாநகரில்


பரிசுத்தர்   இயேசுவின்  அதிசயங்கள்!


பாவம்’,  ‘கவலை’, ‘கண்ணீர்’,  ‘வியாதிகள்’,  ‘பிசாசின் கட்டுகள்’…. என்று, இப்படி  பலவிதமான கட்டுகளில் கலங்கித் தவிக்கும் மக்கள் விடுதலை பெற,  இயேசு விடுவிக்கிறார்  ஊழியங்கள்  மூலமாக நடத்தப்படும் விடுதலை பெருவிழா சேலம் மாநகரில் (2010)  பிப்ரவரி 11-14 தேதிகளில் சிறப்பாக நடந்தேறியது.

அங்குள்ள   c.s.I மேல் நிலைபள்ளி  மைதானத்தில் திரள் கூட்டமாய் திரண்டு வந்த மக்கள், தங்கள் ஆவி, ஆத்துமா, சரிரத்தில் விடுதலையடைய, சகோ. மோகன்  சி. லாசரஸ்,

சகோ. A. அப்பாத்துரை  ஆகியோர் வல்லமையான  தேவ வார்த்தைகளை  அறிவித்து, மனதுருகி, பிரார்த்தனைகள் செய்தார்கள் .

சனிக்கிழமை நடைபெற்ற உபவாச ஜெபத்தில் தேவ ஜனங்கள் தேசத்திற்காக கண்ணீருடன் பிரார்த்தனைகள் செய்தனர் . அன்று இரவு சிறு பிள்ளைகளுக்காக சகோ .மோகன் சி. லாசரஸ்
அவர்கள் சிறப்பு பிரார்த்தனையை நடத்தினார்கள் . ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாலிபர் சிறப்பு கூட்டத்தில் சகோ.S. சாம் ஜெபராஜ் அவர்கள், தேவ செய்தி அளித்து, பிரார்த்தனைகள் செய்தபொழுது, வந்திருந்த வாலிபர்கள் ஆவியானவரின்
அளவில்லா அபிஷேகத்தைப் பெற்று கொண்டு புறப்பட்டுச் சென்றனர்.

கடைசி நாளில், தேவாதி தேவன், தம் ஜனங்களை பரிசுத்தமாக்குகிறவராக வெளிபட்டார். பரலோகமும், பூலோகமும் ஒருங்கே களிகூர்ந்தது. இக்கூடங்களை சகோ. ஜெயசீலன் அவர்கள் தலைமையில்,
தேவ பிள்ளைகள் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தனர்.
கர்த்தர்,தம் வல்லமையினால் ஜனங்களை விடுவித்து, சாட்சிகளாக நிறுத்தினார். தேவ நாமம் பலமாய் மகிமைப்பட்டது!

ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளுக்கு முழு மனதோடு கீழ்படிந்து, கண்ணீருடன் தங்களை அர்பணித்ததைக் கண்கூடாக காண முடிந்தது, ஒவ்வொரு நாளும்  பிசாசுகள் அலறி ஓடின.