Reports Vallioor Meetings
Vallioor Meetings
திருநெல்வேலி மாவட்டம்- வள்ளியூரில், நான்கு நாட்கள் விடுதலை பெருவிழா, கர்த்தருடைய மகத்தான வல்லமையினால் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த வருடத்தின் முதல் விடுதலை  பெருவிழாவாக  நடைபெற்ற இக்கூட்டங்களில், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி வந்தனர்.
இக்கூட்டங்களை தடை செய்ய சாத்தான் எவ்வளவோ முயற்சிகளைச் செய்தும், கர்த்தர் அவனை வீழ்த்தி, வெற்றி சிறந்தார். ஜனங்கள் மிகுந்த வாஞ்சையோடும், தாகத்தோடும் கலந்து  கொண்டு கர்த்தருடைய வார்த்தைகளை கேட்டு, விடுதலையையும், இரட்சிப்பின் களிகூருதலையும்பெற்று கொண்டனர்.
பகல் வேளைகளில் நடைபெற்ற உபவாச ஜெபம், வாலிபர்  மற்றும் மாணவர்  கூடுகைகளையும் கர்த்தர்  அபரிமிதமாக  ஆசீர்வதித்தார். சகோ மோகன் சி லாசரஸ், சகோ.அப்பாதுரை,மற்றும் இயேசு  விடுவிக்கிறார் குழுவினரை மிகுந்த வல்லமையோடு பயன்படுத்தி, தமது நாமத்தை மகிமைபடுதினார். கண்ணீருடன் மக்கள் மனந்திரும்பினதையும், அநேகருகுள்ளிருந்து பிசாசு அலறி ஓடியதையும் கண்கூடாக பார்க்க முடிந்தது. இக்கூட்டத்தில், பல திருச்சபைகளை சார்ந்த ஏராளமான போதகர்கள் கலந்து கொண்டு ஜெபித்து, சிறப்பித்தனர்.
3ம் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 800 சிறு பிள்ளைகளுக்காக தனித்தனியே பிரார்த்தனைகள் செய்யப்பட்டது. ஒவ்வொரு நாளும் அற்புதங்களையும், விடுதலையையும் பெற்று கொண்ட மக்கள், தங்கள் அனுபவங்களை சாட்சியாக பகிர்ந்து கொண்டனர்.   வள்ளியூர் வட்டார நற்செய்தி குழுவின் அங்கத்தினர்கள், இக்கூட்டங்களை மிகச்சிறப்பாக பிரயாசப்பட்டு நடத்தினர். கர்த்தரின் நாமம் பலமாய் வெளிப்பட்டது