விழுப்புரத்தில்
விடுதலை நாயகர் இயேசு
ஏப்ரல் 8,9,1௦,11, தேதிகளில் விழுப்புரம் பட்டணத்திலுள்ள நகராட்சி பள்ளி மைதானம் விடுதலை நாயகர் இயேசுவின் வரவால் விழாக்கோலம் பூண்டது .
பல்லாயிரக்கணக்கான ஜனங்கள் எவ்வித பாகுபாடுமின்றி மிகுந்த ஆவலுடன் கலந்து கொண்டனர். சகோ மோகன் சி, லாசரஸ், சகோ ஆ அப்பாத்துரை, ஆகியோர்
விடுதலை அளிக்கும் கர்த்தரின் வார்த்தைகளை மிகத் தெளிவாக எடுத்துரைத்து ஜனங்கள் துக்கம், பயம், கவலை, மற்றும்சாபம் நீங்கி மகிழ பிரார்த்தனைகள் ஏறேடுத்தார்கள் .
ஜனங்கள் கண்ணீரோடு மனந்திரும்பி பாவ வழிகளில் இருந்து விடுதலை பெற்று புது வாழ்வை அடைந்தனர், மனந்திரும்பிய மக்களை தேவன் தம் வல்லமையினால்
தொட்டு சுகமாக்கினார் அற்புதங்களை பெற்ற மக்கள் சாட்சி கூறி தேவனை மகிமைப்படுத்த்தினர்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற “பெண்கள் சிறப்புக்கூட்டத்தில் சகோதிரி ஜாய்ஸ் லாசரஸ் அவர்கள் சிறப்புச்செய்தி அளித்து ஜெபங்கள் ஏறேடுத்தார்கள்”
சனிக்கிழமை நடைப்பெற்ற உபவாச ஜெபத்தில் ஏராளமான ஜனங்கள் கலந்து கொண்டு தேசத்திற்காக பிரார்த்தனைகள் ஏறேடுத்தார்கள். அன்று இரவு கூட்டத்தில் சிறுப்பிளைகளுக்காக
பிரத்தியேகமாக பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற “வாலிபர் சிறப்புக்கூட்டதில்” கலந்து கொண்ட வாலிபர்களுக்கு சகோ ஆ அப்பாத்துரை அவர்கள் சிறப்புச் செய்தியளித்து பிரார்த்தனைகள் ஏறேடுத்தார்கள்
வாலிபர்கள் ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்று புது பெலனுடன் கடந்து சென்றனர்.
இந்த கூட்டங்களை சகோ நேசராஜ் அவர்கள் மிகுந்த ஜெபத்துடனும் பிரயாசத்துடனும் ஒழுங்கு செய்திருந்தார்கள் ஆண்டவர் இயேசுவினால் அந்த பட்டணத்தில் மிகுந்த சந்தோசம் உண்டாயிற்று ,
தேவ நாமம் மகிமைப்பட்டது.
கூட்டஒருங்கிணைப்பாளர்
Villupuram Meetings
Leave a Reply
