| கிறிஸ்துவுக்குள் எனக்கு மிகவும் பிரியமானவர்களே ! |
| ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன் ! |
| ஒரு முக்கியமானகாரியத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் |
| நாங்கள் குழுவாக இஸ்ரவேல் தேசத்திற்கு சென்றிருந்த பொழுது அங்குள்ள கெத்செமனே தோட்டத்தில் ஜெபித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது என்னையறியாத ஆத்துமபாரம் என்னை நிரப்பி ஆத்துமாக்களுக்காக கதறி அழுது ஜெபித்த வேளையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து முகமுகமாய் தரிசனமாகி “உனக்கு 10 ஆண்டுகள் தருகிறேன், அதற்குள் நீ எனக்கு 1 கோடி ஆத்துமாக்களைக் கொண்டு வர வேண்டும்” என்று கட்டளையிட்டார். அதன்படி 2020 ம்ஆண்டுக்குள் 1கோடி ஆத்துமாக்களை சந்தித்துமுழுமையாக இரட்சிப்புக்குள் வழி நடத்த கர்த்தரே திட்டங்களையும் தந்து கொண்டேயிருக்கிறார். சிறுபிள்ளைகள் ,இளம்வாலிபர்கள் வாலிபர்கள் ,முதியோர், கண்தெரியாதோர், தருமம்எடுப்பவர்கள், ஆசிரியர்கள்,வியாபாரிகள், திருநங்கையர் ,அரசியல் தலைவர்கள் IT துறையினர் , விவசாயிகள் என ஒவ்வொரு துறையிலுள்ள மக்களையும் சந்திக்க துரிதமாக ஜெபித்து செயல்படுகிறோம் . |
| இந்த மாபெரும் தரிசனத்தில் நீங்களும் இணைந்து செயல்பட உங்களை மிகுந்த அன்புடன் அழைக்கிறேன் . தினமும் குறைந்தது 10 நிமிடங்கள் இதற்காக நீங்கள் ஜெபித்தால் எளிதில் இந்த திட்டத்தை நிறைவேற்றி விடலாம் .நாம் இணைந்து ஜெபித்து 1 கோடி ஆத்துமாக்களை ஆதாயம் செய்து ஆண்டவரின் கட்டளையை நிறைவேற்றுவோம்! |
| ஜெபக்குறிப்புகள்: |
| 1 .ஒரு கோடி ஆத்துமாக்களை திட்டமாக இரட்சிப்புக்குள் நடத்துகிற இந்த ஊழியத்திற்கு விரோதமாக எழும்ப எத்தனிக்கிற அனைத்து பிசாசினுடைய கிரியைகளும் ,தந்திரங்களும் அழிக்கப்பட,
2 .இந்த ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான திட்டங்களை கர்த்தரே வாய்க்கச் செய்ய, திறமையான தேவ ஞானம் பெற்ற ஊழியர்களை இத்திட்டத்தில் கர்த்தரே பயன்படுத்த,.
3 .இந்தியாவின் எந்தெந்த மாநிலங்கள் , பட்டணங்களில் ஊழியங்களை நிறைவேற்ற வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறாரோ அந்தந்த இடங்களில் ஊழியங்களை நிறைவேற்றி ஆத்துமாக்களை ஆதாயம் செய்வதற்கு தேவன் வழிகளை திறக்க ,நற்செய்தி கூட்டங்களுக்காக செல்கிற இடமெங்கும் லட்சக்கணக்கில் ஆத்துமாக்கள் ஆண்டவரை ஏற்றுக் கொள்ள
4 .வாலிபர் ஊழியங்களின் மூலம் ஒரு கூட்டம் வாலிபர்களை கர்த்தருக்குள் நடத்த ,அதற்கு தேவையான திட்டங்களை கர்த்தர் வெளிப்படுத்த ,இதில் ஊழியம் செய்கிற ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த , 5 . 1கோடி ஆத்துமாக்கள் திட்டத்தின் கீழ் எராளமான சிறு பிள்ளைகளை மற்றும் இளம் வாலிபர்களை கர்த்தருக்குள் கொண்டுவர பிரயாசப்படுகிறோம் .சிறு பிள்ளைகளுக்குள் இயேசு உருவாக, நாம் எடுக்கிற முயற்சிகளை தேவன் வாய்க்கசெய்ய . 7 .எராளமான கிராமங்களில் நமது சுவிசேஷ குழுவினரை கொண்டு கிராம ஊழியங்களை நிறைவேற்ற இருக்கிறோம் .இதன் மூலம் சந்திக்கப்படுகிற ஆத்துமாக்கள் திருச்சபைகளில் சேர்க்கப்பட்டு நிலைநிற்க . 8 .பெண்கள், முதியோர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், அரசுஅதிகாரிகள், காவல்துறையினர், வாகனஓட்டுநர்கள், மீனவர்கள், விளையாட்டுத் துறையினர் என சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதி மக்களையும் சந்தித்து அவர்களை கிறிஸ்துவுக்குள் நடத்த எடுக்கிற அனைத்து முயற்சிகளையும் தேவன் வாய்க்கப்பண்ண. 9 .தொலைக்காட்சி மற்றும் மீடியாக்கள் மூலம் செய்யப்படுகிற ஊழியங்கள் மூலம் ஏரளமான மக்கள் இரட்சிக்கப்பட , 10 .இம் மாபெரும் திட்டம் நிறைவேற்றப் படுவதற்கான எல்லா பணத் தேவைகளையும் தேவன் குறைவின்றி சந்திக்க . 12 .இந்த தேவனுடைய தரிசனத்தை பெற்றுக் கொண்ட, நிறைவேற்ற திட்டமிட்டு |
Pray For the Vision
3 Comments
Leave a Reply

i am with join in your prayer group
thankyou
b. isaiah
Thanks for these prayer points, i have prayed today for u brother, i will also gather people for you not onli in india, as i am living in US , i want to gather here also .. so thanks for yr prayers so far and the honestful ministry…
I will keep these points and especially my prayers are there for you and for ur ministry..
god bless you,..
p.selvasubha, US
Hi, I will keep this prayer list in my prayer
And I will definitely pray for your ministries also.
Thank you!
God bless you!